வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே தேவை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உறவுகளின் சங்கத்தினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், 

“நாங்கள் இப்போதும் எமது உறவுகளை தொடர்ச்சியாகத் தேடி வருகின்றோம். எமக்குரிய பதில்கள் இன்னமும் வழங்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அமைக்கப்படும் அல்லது பரிந்துரைக்கப்படும் உள்ளகப் பொறிமுறைகளில் எமக்கு நம்பிக்கையில்லை.

நீதிதான் எமக்குத் தேவை…

நாம் சர்வதேச விசாரணைகளையே திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். அதுதான் எமது முதலும் முடிவுமான கோரிக்கையாக உள்ளது. எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையே தேவை! அநுர அரசுக்கு அழுத்தம் | International Investigation For The Disappearances

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவையோ அல்லது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவையோ வழங்கி போராட்டத்தை முடித்துவிட  இலங்கை அரசு முயன்று வருகின்றது.

பணத்தை நாம் கோரவில்லை. மரணச் சான்றிதழையும் நாம் கோரவில்லை. நீதிதான் எமக்குத் தேவை. எனவே, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்படும் பொறிமுறைகளை நாம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளனர்

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *