யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் தள்ளிவிழுத்தி, கையடக்க தொலைபேசி, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த கொள்ளை சம்பவமானது இன்று (9) மாலை நடந்துள்ளது.

திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் யாழ்ப்பாணம் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த பகுதியல் முன்னர் பொலிஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

யாழில். நடந்த அவலம் ; நடுவீதியில் பெண்களுக்கு நேர்ந்த கதி | The Fate Of Women In Jaffna S Midway

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானதை தொடர்ந்து, வீதியோர பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டன.

பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

அல்லைப்பிட்டி சோதனைச்சாவடி அகற்றப்பட்டதை தொடர்ந்து, இந்த பகுதியில் பெண்களிடம் அடிக்கடி வழிப்பறி நடந்து வருகிறது.

ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள், ஆனையிறவு சோதனைச்சாவடிகள் அகற்றப்படடதை தொடர்ந்து கால்நடை கடத்தல் தீவிரமடைந்துள்ளதாக பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *