அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் மோதியதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், பொலவத்தை சந்தியில் உள்ள பாதசாரி கடவையில் நடந்து சென்ற யாசக பெண் ஒருவர் மீதே கஜேந்திர குமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் மோதியுள்ளது.

கஜேந்திர குமார் பொன்னம்பலம் எம்.பி வாகனத்தில் மோதி பெண் உயிரிழப்பு | Woman Dies After Being Hit By Jaffna Mp S Vehicle

 யாசக பெண் உயிரிழப்பு

உயிரிழந்தவர் 65 – 70 க்கு இடையிப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பயணித்த (8) அன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் விபத்து தொடர்பில் கஜேந்திர குமாரின் சாரதியான ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *