பிரான்ஸ் – பாரிஸின் புறநகர் பகுதியில் கடந்தவாரம் 29 வயதான இலங்கை தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (06) முதுகில் சுடப்பட்டுகொல்லப்பட்ட 29 வயதான  இளஞனின்  கொலைக்குரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை என பிரான்ஸ்  பொலிஸார் தெரிவித்துள்ளதாக  கூறப்படுகின்றது.  

குற்றுயிராக கிடந்த இளைஞனுக்கு முதலுதவி

உயிரிழந்த  தமிழ் இளைஞன் இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர்   தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், நண்பர் அங்கிருந்து அகன்றபோது நிலையில்  இளைஞன்  சுடப்பட்டதாகவும்  பொலிஸ்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 தகவலறிந்து  , உடனடியாக அந்த இடத்துக்குசென்ற அவசரகால சேவை பிரிவு பணியாளர்கள் தரையில் குற்றுயிராக கிடந்த  இளைஞனுக்கு   முதலுதவிகளை செய்த போதிலும் அந்த முயற்சிகள் பலனளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் மரணடைந்துள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.

இந்த நிலையில், கொல்லப்பட்ட  இளைஞன்  வாடகை வண்டி ஓட்டுநனராக பணியாற்றியதாவும் தெரிவிக்கப்படுகிறது.

 மேலும்  கொலைக்கான காணம் வெளியாகாத நிலையில்  மேலதிக  விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக  அந்த  தகவல்கள்  மேலும்  தெரிவிக்கின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments