இலங்கை நாடாளுமன்றில் இன்று 20 ற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் உள்ளனர்.அவர்களில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த நான்கு வைத்தியர்கள் உள்ளனர்.

இவ்வாறு வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றில் இருக்கும் வைத்தியர்கள் இந்தப்பிரதேசத்தில் பரவும் டெங்கு போன்ற தொற்று நோய்கள் தொடர்பில் ஒரு வெள்ளை அறிக்கையை விடாமல் வைத்தியசாலைக்குள் செல்கின்றேன் என காணொளிகளை விடுவது வைத்தியதுறை சார்ந்த தீர்வல்ல.

தேசியத்தலைமை ஒருவிடயத்தை பலமுறை சொல்லியிருக்கிறது. அவருடைய பெயரை பலமுறை உச்சரிக்கிறோமே ஒழிய அவர் எதனை கற்றுத்தந்தார் என்பதை ஒருவரும் புரிந்து கொள்வதில்லை.

நாம் எவ்வளவு மேலே மேலே செல்லும்போது அதற்கேற்றவகையில் எமக்கு பணிவும் பண்பும் வரவேண்டும் அதனை பாரத்து மற்றவர்கள் ஆசைப்படவேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம்.

எமது சக ஊடகமான லங்கா சிறியுடனான ஊடறுப்பு நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அநுர அரசின் இடைக்கால கணக்கறிக்கை, மற்றும் பலவிடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் காணொளியில்…. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments