கற்பிட்டி – பாலவியா பிரதான வீதியில் இன்று (13) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

நுரைச்சோலையில் இருந்து முந்தலம் நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்று அவ்வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி | Two Youths Killed In Nighttime Vehicle Accident

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களில் இருவர் படுகாயமடைந்து புத்தளம் (puttalam)ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான நிபுன் பிரிமால் (வயது 29) மற்றும் தசுன் மதுசங்க (வயது 28) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments