உலகம் முழுவதும் காலநிலை மிக வேகமாக மாற்றமடையும் நிலையில், விஞ்ஞானிகள் அதிரவைக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதன்படி, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைய தொடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1986ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் உள்ள பில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து இந்த பனிப்பாறை உடைந்து பிரிந்தது.

விஞ்ஞானிகளின் எச்சரிக்கை

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதற்கு ஏ23 என்று பெயரிடப்பட்டதுடன் சில வாரங்கள் கடலில் இந்த பாறை நகர்ந்து வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் உறைந்தது.

நீரில் மூழ்கவுள்ள கண்டங்கள்: விஞ்ஞானிகளின் அதிரவைக்கும் எச்சரிக்கை! | The World S Largest Glacier Is About To Melt Warn

அவ்வாறு 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கும் நகராமல் உறைந்து இருந்த அந்த மிகப்பெரிய பனிப்பாறை தற்போது உடைய தொடங்கி உள்ளதுடன் நகர தொடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏ23ஏ பனிப்பாறை மேலும் உடைந்து உருகுவதனால் கடலில் நீர் மட்டம் உயரும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தநிலையில், கடல் நீர் மட்டம் உயர்வதால் பல கண்டங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *