கிளிநொச்சியில் வயலுக்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் வயலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன குடும்பஸ்தர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

குறித்த சம்பவம் கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் முக்கம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் வயலுக்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு | Family Member Kilinochchi After Going To The Field

குறித்த சம்பவத்தில் 38 வயதுடைய சின்னத்துரை காந்தரூபன் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments