J

ஒரு சில நிர்வாக மற்றும் அரசியல் நோக்கங்களிற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் கடந்த 24, 25ஆம் திகதிகளில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டமானது திரிபுபடுத்தப்பட்டு வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“தற்பொழுது ஒரு சில நிர்வாக மற்றும் அரசியல் நோக்கங்களிற்காக அது முழுமையாக திரிபுபடுத்தப்பட்டு போராட்டத்தின் நோக்கம் முழுமையாக திசை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.

உண்ணாவிரதப் போராட்ட விவகாரம் ; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு | Strike Issue Jaffna University Students Alleges

போராட்டத்தின் நோக்கத்தினையும் சரியான புரிதலையும் வழங்கும் நோக்கத்துடன் இந்த ஊடக அறிக்கையினை வெளியிடுகின்றோம். குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது பின்வரும் நான்கு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து நடைபெற்றிருந்தது.

விதிகளிற்குப் புறம்பாக நடைபெறும் ஃ நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்துதல், போராடுதல் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தல், விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்தல், மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்குதல்.  

எமது பல்கலை மாணவர்கள் மீது விதிக்கப்பட்ட வகுப்புத்தடைகள் விதிமீறல்களுடனும் உரிய கால நீட்டிப்புக்களுடனும் நடைபெறவில்லை என்று 25.01.2025 அன்று நடைபெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

உண்ணாவிரதப் போராட்ட விவகாரம் ; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு | Strike Issue Jaffna University Students Alleges

கல்லாசனங்கள் அகற்றப்பட்ட விடயத்தில்க் கூட எவ்வித நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படாமலும், ஒப்புதல்கள் பெறப்படாமலும் பொதுச் சொத்தொன்று உடைத்துத் தகர்க்கப்பட்டுள்ள குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளமையினையும் பேரவையானது கண்டறிந்துள்ளமை நோக்கத்தக்கது.

மேற்படி விதிமீறல்களுடன் நடைபெற்ற விடயங்கள் குற்றமெனக் கணிக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த செயல்கள் யாவும் போதைப் பொருட்களிற்கு எதிரான நடவடிக்கையின் விளைவுகளாக சித்தரித்து திரிபுபடுத்தப்படுகின்றமை வேதனையானது.

முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்தெரிவுச் சிக்கலில் உள்ள பிறழ்வுகளையும், whatsapp குழுவில் கலந்துரையாடிய மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமையும் திட்டமிட்டு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிகார பீடங்கள் தங்களின் நலன்களிற்காக போராடும் வர்க்கங்களை பிரித்தாளும் வழமை யாவரும் அறிந்ததே! அவ்வாறு தான் ஒரு சில நிர்வாக ஒத்தோடிகளின் துணை கொண்டு புதிய புனைவுகள் எம்மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments