அமெரிக்க – தென்கொரியா கூட்டு இராணுவ பயிற்சியை அதிகரிப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா க்ரூஸ் வகை ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

வடகொரியாவுக்கும் (North Korea), தென்கொரியாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் தென்கொரியாவுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வந்தார்.

இதன் காரணமாக ஜோபைடன் காலத்தில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un) அமெரிக்கா மீது கடுமையான நிலைப்பாட்டில் இருந்துள்ளார்.

ட்ரம்பின் பதவியேற்பு

எவ்வாறாயினும், தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்காவில் டொனால் ட்ரம்ப் (Donald Trump) பதவியேற்றுள்ள நிலையில், அமெரிக்காவுடனான மோதல் தணியும் என எதிர்பார்க்கப்பட்டது.

அத்தோடு, ட்ரம்பிற்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் இற்கும் இடையில் முன்பிருந்தே நல்ல உறவு பேணப்பட்டு வந்துள்ளது.

எனினும், தென்கொரியாவுடன் சேர்ந்து வடகொரியா எல்லையில் அமெரிக்கா போர் பயிற்சியை தொடங்கி உள்ள நிலையில், கிம் ஜாங் உன் ஆத்திரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போர் திறன் பயிற்சி

இந்த நிலையில், அமெரிக்காவால் தங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதால் ராணுவம், ஆயுதம் மற்றும் ஏவுகணை கட்டமைப்புகளை பலப்படுத்தி வருவதன் ஒரு பகுதியாக வடகொரியா குரூஸ் வகை ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது.

டொனால்ட் ட்ரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்த வடகொரிய ஜனாதிபதி | North Korea Test Cruise Missile System Response Us

இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து கிம் ஜாங் உன், மிகவும் சக்தி வாய்ந்ததாக ராணுவத்தை மாற்ற வேண்டும் என்றும் போர் திறன் பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதன்படி, இந்த செயல் என்பது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்தாலும் அமெரிக்காவுடன் மோதலுக்கு தயார் என்பதை காட்டும் வகையில் உள்ளதாக சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments