முல்லைத்தீவு புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று (07) மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார்.

தமிழர் பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பலி | Girl Dies After Being Electrocuted In Mullathivu

தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதும் சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் புளியங்குளம், பழையவாடி பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுமியே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments