தமிழர் பகுதியில் மதுபானசாலையை அகற்றுமாறு மக்கள் போராட்டம் கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏ32 பிரதான வீதியின் வாடியடி சந்தியை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் மதுபானசாலையை அகற்றுமாறு மக்கள் போராட்டம் | People Protest Remove The Liquor Store Kilinochchi

இக்கோரிக்கைகளை வலியுறுத்தியே இப்போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அதனையடுத்து, பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர்களை போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் கையளித்தனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *