பொத்துபிட்டியவில் உள்ள பத்தினாவத்த பகுதியில் தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வெத்தகல, கலவானை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தகாத உறவு 

தனது கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வசித்து வந்த பெண்ணொருவர் வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.காதலர் தின இரவில், அந்தப் பெண்ணும் அவளுடைய காதலனும் வீட்டில் இருந்தபோது, ​​அந்தப் பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

தகாத உறவால் கொடூரம்: தடியால் அடித்துக் கொலை | Inappropriate Relationship Beatendeath With Stick

இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​கணவர் அங்கிருந்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்த பெண் பயந்து வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். தாக்குதலில் காயமடைந்த நபர் கலவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று (15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments