அமெரிக்காவிலிருந்து(us) இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்டுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள்(indian) கைகளில் விலங்கு பூட்டியும் கால்களைச் சங்கிலியால் பிணைத்தும் விமானத்தில் அனுப்பி வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து சி-17 விமானத்தில் சனிக்கிழமை(பெப். 15) நள்ளிரவு பஞ்சாப்(punjab) மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தடைந்த 117 இந்தியர்கள் சிறைக் கைதிகளைப் போன்று நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் அனுபவித்த கொடுமை

அமெரிக்க விமானத்தில் நாடுகடத்தப்பட்டு தாயகம் வந்தடைந்த பயணிகளில் ஒருவரான தல்ஜீத் சிங், விமானத்தில் தாம் அனுபவித்த கொடுமைகளைப் பகிர்ந்துள்ளார். அவரது கூற்றுப்படி, தங்கள் கால்களை சங்கிலியால் கட்டிப்போட்டதாகவும், கைகளிலும் விலங்கால் பூட்டி விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அதே விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ள 20 வயது இளைஞரான சௌரவ் என்பவரும் மேற்கண்ட இதே கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து மிருகத்தனமாக அனுப்பப்பட்ட இந்தியர்கள் | Deportees Hands Cuffed Legs Were Chained

முன்னரும் விலங்கிட்டு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்

முன்னதாக, முதல்கட்டமாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களும் இம்மாதம் 5-ஆம் திகதி அமிர்தசரஸ் வந்திறங்கிய நிலையில், அவர்களும் அமெரிக்க விமானத்தில் இதே பாணியில் விலங்கிட்டு அழைத்து வரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலிருந்து மிருகத்தனமாக அனுப்பப்பட்ட இந்தியர்கள் | Deportees Hands Cuffed Legs Were Chained

எனினும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்டுள்ள இந்தியர்களும் சிறைக் கைதிகளைப் போலவே நேற்று அழைத்து வரப்பட்டுள்ளனர் 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments