யாழ்(jaffna).வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் (19) இன்று மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியாவில் இருந்து வந்தவர்களே தாக்குதல்

வவுனியா(vavuniya) பகுதியில் இருந்து வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வாகனத்திற்குள் வாள்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி 

அடி காயங்களுக்குள்ளான மூவரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

யாழில் அடியாட்களை வைத்து குடும்பத்தினர் மீது தாக்குதல் : வெளிநாட்டிலிருந்து வந்தவர் அராஜகம் | Three People Attacked Bars In Jaffna

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *