நாட்டில் தேங்காய் விலை அதிகரிப்பு என்பது தற்போது பாரிய சிக்கலை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளதுடன் தேங்காய் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் அதிகம் பாதித்துள்ளது.

இவ்வாறு, தொடர்ந்து தேங்காய் விலை அதிகரிப்பதனால் வியாபார நடவடிக்கைகள் வழமைக்கு மாறாக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தேங்காய் வியாபாரிகள் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், தேங்காய் விலை குறைப்பு தொடர்பில் அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்த போதிலும் அதற்கான மாற்றம் எதையும் காணவில்லை எனவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனடிப்படையில், இவ்வாறு தேற்காய் தட்டுப்பாடு மற்றும் விலையதிகரிப்பு காரணமாக மக்கள் தேங்காய் பால் பவுடரை உபயோகிப்பதை வழமையாக்கி இருக்கும் நிலையிலும் இதனால் அனைத்து வகை உணவுகளையும் தயாரிப்பதற்கு ஏதுவான நிலை இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் குறித்த தேங்காய் விலை அதிகரிப்பு, வியாபாரிகளின் பொருளாதாரம், தற்போதைய வியாபார நடவடிக்கை மற்றும் இதனால் ஏற்படபோகும் மாற்றம் என்பவை தொடர்பில் தேங்காய் வியாபாரிகள் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய அடையாளம் நிகழ்ச்சி,

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments