யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

காவல்துறை ஊடகப்பேச்சாளர் பதவி விலகல்!

யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 48 வயதுடைய ராஜலிங்கம் கேசவன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் கோர விபத்து ; அரச பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு | Family Member Dies Being Government Bus Jaffna

குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி செம்மணி வீதியூடாக பயணித்துக்கொண்டு இருந்தார்.

இந்நிலையில் அவ்வீதியால் வந்த அரச பேருந்து அவரை முந்திச் செல்ல முற்பட்டபோது அவர்மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments