தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

எம்ஜிஆர் எமக்கு உதவ முன்வந்தார்,

பாகம் இரண்டின் நாலாவது தொடர்

எம்ஜிஆர் அவர்களிற்கும் எமக்குமான உறவு எப்படிமலர்ந்தது,

 எம் ஜீ ஆர் அவர்களின் செயல்பாடுகள் பற்றிப்பார்ப்போம் ; 27/10//1983 அன்று எம் ஜீ ஆர் அவர்களின் உறுதியான முடிவுதான் தேசியத் தலைவரை காப்பாத்தியதோடு தமிழழத்தையும் காப்பாற்றியது.

அது மட்டுமல்ல 1983 இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது இந்தியா இராணுவம் இலங்கை மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகச் சட்டசபையில் கூறிஇருந்தார் எம் .ஜீ.ஆர்.

அத்தோடு முன்னர் மாற்று இயக்கங்களிற்கு சிறு உதவிகளை செய்தவர் பின்னர் அவர்களின் தவறான நடவடிக்கைகளைக் கண்டு அவர் அவர்களை முற்றாகக் கைவிட்டார். உறுதி தளராமல் தலைவர் ஒழுக்கக் கட்டுப்பாட்டோடு இருந்து தமிழீழக் கொள்கைக்காகப் போராடியது எம் ஜீ ஆர் அவர்கட்டு மிகுந்த நம்பிக்கையைக்கொடுத்தது; அதனால் தமிழீழத்தைப் போராடி வென்றெடுக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் விடுதலைப்புலிகள் மாத்திரமே என்பதை அவர் விளங்கிக் கொண்டார். 

எமது தலைவரின்உறுதியையும், ஆளுமையையும் அவர் புரிந்து கொண்டார். இதை அறிந்த கருணாநிதி ஈழ இயக்கங்கள் அனைத்தையும் தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார்; ஆனால் விடுதலை புலிகள் மட்டும் அதை ஏற்கவில்லை; மற்ற இயக்கங்கள் அனைத்தும் அவரைப்போய் சந்தித்தார்கள்.

 இது எம். ஜீ .ஆர் அவர்களிற்கு விடுதலை புலிகள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது;

83 இலங்கை அரசால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனப் படுகொலையைத் தொடர்ந்து ஈழ இயக்கங்களிற்கு இந்தியாவில் பயிற்சி எடுக்க பாலா அண்ணையோடு கதைத்து வழி காட்டியவரான தமிழகப் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த காவல் துறை துணை மா அதிபர் அலக்ஸாண்டர் அவர்களும் எமது ஈழ விடுதலை ஆதரவாளர்களில் முக்கியமான வராகக்  கருதப்படுகின்றார்.

 இதே காலப் பகுதியில்தான் எம். ஜீ ஆர் அவர்களின் பாரிய உதவி ஒன்று எமக்குக் கிடைத்தது.

எம்.ஜீ.ஆர் அவர்களுக்கும் எமது அமைப்பு சார்பாக தலைவர் பாலா அண்ணன், கேணல் சங்கர் இவர்களிற்கும் இடையே ஒரு கலந்துரையாடல் நடைபெற்ற வேளை அங்கே பேசிக்கொண்டு இருந்தபோது ஆயுத ரீதியாகவும் எங்களிற்கு உதவிகள் தேவைப்படுகின்றது என்பதை கேணல் சங்கர் அவர்கள் மெதுவாக அவருக்குத் தெரியப்படுத்தினார்.அது பிரச்சனை இல்லை தேவையான பணத்தை நான் தருகின்றேன் எவ்வளவு தேவையென கேட்டுள்ளார்; அதற்கு இவர்கள் இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும் என சொல்லியுள்ளனர். அது பிரச்சனை இல்லை அதைத் தருகிறேன் என்று சொல்ல  தலைவர் உட்பட மூவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

நாளை என்னை வந்து சந்தியுங்கோ…! என எம். ஜீ .ஆர் சொன்னார். அடுத்த நாள் பாலா அண்ணை,கேணல் சங்கர், ரகு மற்றும் லெப் கேணல் இம்ரான் வாகனத்தை ஓட்டிச் செல்ல பறங்கிமலையில்  உள்ள       எம். ஜீ. ஆர் அவர்களின் இல்லத்தில் எம்மவர்களின் வருகையை எதிர்பார்த்தபடி அவர்  நின்றார். எம்மவர்களைக் கண்டதும் பங்களவிற்குள் அழைத்துச் சென்றார்; அங்கே சென்றதும் பணம் காட்போட் பெட்டிக்குள் அடிக்கி வைக்கப்பட்டு இருந்தது. பத்துப்பெட்டிகளை இவர்களின் வாகனத்தில் எம். ஜீ .ஆர் ஏற்றி அனுப்பினார்.

கோடிக்கணக்கான பணத்துடன் வாகனத்தில் செல்வது பாதுகாப்பாக இருக்காது எனக் கருதி பாலா அண்ணை அவருக்குச் சொன்னபோது சரியென சொல்லி விட்டு யாரோடோ போன் பேசினார் எம்.ஜீ.ஆர்; உடனே இரண்டு ஜீப்பில் ஆயுதம் தரித்த பொலிஸார் வந்து இவர்களை பாதுகாப்பான முறையில் இவர்களின் வாகனத்திற்கு முன்னும் பின்னுமாக சென்று வாகனத்தை பாதுகாப்பாகக் கொண்டு விட்டனர்.

அங்கே தலைவரும், கேணல் தமிழ்ழேந்தி அவர்களும் நின்றார்கள். அவர்கள் பணத்தைக் கண்டதும் பெரும் மகிழ்சி அடைந்தார்கள்.  இந்த சம்பவத்தின் பின் எம். ஜி .ஆர்  மீது பெரிய நம்பிக்கை தேசியத் தலைவருக்கு ஏற்பட்டது. அதற்குப்பின்னர் இருவருக்குமான உறவு நெருக்கமானது; அவர் ஒரு முதல் அமைச்சராக எங்களோடு பழகவில்லை அவர் ஒரு சகோதரன் போலவே பழகினார்;

 எங்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முழு ஆதரவு தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அது மட்டும் அல்ல நீங்கள் விட்டு விடக்கூடாது தொடர்ந்து எதிர்த்துப் போராடி சுதந்திர தமிழீழத்தை அமைக்க வேண்டுமென தொடர்ந்து தலைவருக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தார்; அதற்கான நிதியுதவி, மற்றும் ஆயுத உதவிகளையும் நான் தருவேன் என்பதை உறுதிப் படுத்திக்கொண்டே இருந்தார்.

இந்திய மத்திய அரசு எமது அமைப்பு மீது ஒரு தவறான முடிவு எடுத்த போதும் கூட அது மத்திய அரசின் முடிவு “என்னைப் பொறுத்தவரை நான் இறுதி வரை உங்களிற்கு ஆதரவாகயிருப்பேன்” என உறுதிப்படுத்தினார்

. அது மட்டும் அல்ல நாம் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி இந்தியா ஊடாகத் தமிழீழம் கொண்டு செல்வதற்கும் அவரின் உதவி எமக்கு கிடைத்தது;இவ் உதவிகளை செய்த எம். ஜி. ஆர் அவர்கட்கு 1985 கடசிப்பகுதியில் தலைவர் நேரில் சென்று தனது நன்றியைத் தெரிவித்ததோடு அவருக்கு அன்பளிப்பாக புதிய  AK 47 ரக இயந்திர துப்பாக்கி  ஒன்றினையும் பரிசாக வழங்கி அதை இயக்குவது தொடர்வாகவும் அவருக்கு சொல்லிக் கொடுத்தார் தலைவர். எம். ஜி .ஆர் தனது நன்றியைத் தலைவருக்கு தெரியப்படுத்தினாராம். எம். ஜி.ஆர் அவர்களின் உதவியை எம்மால் அளவிட முடியாது; இவர் மட்டும் அல்ல தமிழகத்தில் குளத்தூர்மணி, ஐயாநெடுமாறன், வைக்கோபாலசாமி என நாம் அறியாத பல தமிழக மக்களும்; தமிழகத் தலைவர்களும்; நாம் தமிமீழத்தை மீட்க வேண்டும் என்பதற்காகத் தோளோடு தோள் நின்று எம்மோடு சேர்ந்து உழைத்தவர்கள் என்பதை ஒவ்வொரு ஈழத் தமிழனாகிய நாம் மறந்து விடக் கூடாது என தேவர் குறிப்பிட்டார்.

1983/11 ஆம் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு பயிற்சி தர இந்தியா அனுமதி வழங்கியது.


பாலா அண்ணை முதலில் தமிழக புலனாய்வுத்துறை Q Branch உதவி பொலிஸ் மா அதிபராக பதவி வகுத்த திரு. அலக்ஸ்சாண்டர் என்பவரோடு தொடர்வுகொண்டு;   அவரோடு உரையாடியதைத் தொடர்ந்து

அவரின் ஆலோசனைக்கு அமைய திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில் இந்திய இராணுவப்பயிற்சித் திட்டத்தில் விடுதலைப் புலிகளிற்கும் இடம் வழங்கும்படி கேட்டிருந்தார். அதற்கு இந்தியாஅனுமதி வழங்கியது.

 

முதலாவது, மற்றும் இரண்டாவது, பயிற்சி முகாம் பற்றி ஆரம்ப காலப்போராளியின்நாட்குறிப்பில்இருந்து

அதன் படி1983 / 9 ஆம் மாதம் வட இந்தியாவில் உள்ள “டேராடூன்” என்ற இடத்தில் முதலாவது பயிற்சிக்கான  அணி புறப்பட்டுச் சென்றது; திருநெல் வேலி தாக்குதலிற்கு முன்னர் விடுதலைப் புலிகளில் இருந்த சிரஸ்ற்ற போராளிகளின்மொத்தத்தொகை  33 தாக்குதலிற்கு . பின்னர் இருந்த தொகை 29 திருநெல்வேலி தாக்குதற்கு முன்னர் வீரச்சாவு அடைந்தவர்கள் 4 பேர்( 01. தலைவரின் முதலாவது பாதுகாவலர் லெப் சங்கர் / சத்தியநாதன்,   02. வீரவேங்கை ஆனந்த்,.  03. லெப் .சீலன், 04. லெப். செல்லக்கிளி.

இதில் தலைவரால் முதலாவது பயிற்சிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமல்; இந்தியாவில் நின்று கடமையாற்றியவர்களின் விபரம்

:01. தலைவர்,  02 .பேவி அண்ணை,   03. ராகவன்,  04. அன்ரன் மாஸ்ட்டர், 05. தேவர் அண்ணை, 06. நேசன்,  07. தலைவரின் முதலாவது பாதுகாவலர்  குண்டப்பா,   08 . கே.பி.

இதில்தலைவரால் முதலாவது பயிற்சிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமல்; தமிழீழத்தில் கடமை ஆற்றியவர்கள் தமிழீழத்தில் அனைத்து மாவட்டங்களிற்கான பொறுப்பாளராக; கப்டன் பண்டிதர் தலைவரால் நியமணிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கீழே வன்னிப் பொறுப்பாளராக  மாத்தையா இருந்தார். மட்டு, அம்பாறை பொறுப்பாளராக ராமு இருந்தார். யாழ் மாவட்டப் பொறுப்பாக பசீர்காக்கா மற்றும் அப்பையா அண்ணையும் இருந்தார்கள். திருமலை மாவட்டப் பொறுப்பாக சந்தோஸ் மாஸ்ட்டரும் இக்காலப்பகுதியில்இருந்தார்கள்

மாத்தையாவே மன்னார் மாவட்டத்தையும் கவனித்து வந்தார். இதில்தலைவரால் முதலாவது பயிற்சிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்கள் 01. பொன்னம்மான்,  02. அருணா , 03. புலேந்திரன், 04. கணேஸ், 05. யோகன்பாதர்,  06. விக்டர்,  07. ராஜேஸ்,  08. லிங்கம்,   09. பொட்டுஅம்மான், 10.  றெஜி, 11.ஞானம், 12. ரஞ்சன் லாலா, 13. கிட்டு,  14.அல்பேட்,  15. சுப்பையா, இவர்கள் அங்கே பயிற்சிக்குச் சென்றதும்; கப்டன். பண்டிதர் அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து;  புதிதாக 85 இளைஞர்களை இணைத்து; முதலாவது “லூப்பி” பயிற்சிக்காக அனுப்பி வைத்தார்.

இதில் தமிழீழத்தில் இருந்து அனுப்பப்பட்ட என்பத்தைந்து இளைஞர்களில் தலைவரால் கொழும்பில்  வைத்து மரணதண்டனை வழங்கப்பட்ட பொத்துவில்லையைச்  சேர்ந்த  கனக ரத்தினத்தின் மகன் சைமனும் அடங்குவார். அவர் அங்கே சென்று சிறந்த முறையில் பயிற்சி எடுத்து தமிழீழம் வந்து முக்கிய பொறுப்பாளாராக13/02/1985 அன்று மணலாறு கொக்குளாய் படை முகாம் மீதான தாக்குதலிற்குச் சென்று திறமையாகாச்  சண்டையிட்டு வீரச்சாவு அடைந்தார்.

அவரின் முழுப்பெயர் கனகரத்தினம், ரஞ்சன் பிறப்பு 20 /09/1985 சொந்தமுகவரி, பொத்துவில்.

அன்றில் இருந்து எம்மால் போற்றப்படும் மாவீரர் குடும்பமாக மாறிவிட்டது அவரின் குடும்பம். இதனை அனைவருக்கும் தெரிவிப்பதோடு எமது விடுதலை இயக்கத்தைப் பொறுத்த வரையில் எங்கள் விடுதலைப்பயணத்தில்  எமது தமிழீழ மக்கள் எவரையும் வஞ்சகக் கண்ணோட்டத்தோடு நாம் பார்த்தது இல்லை.
அவன்தூரோகி , இவன் துரோகி, என்று அடையாளப்படுத்தி வைப்பதோ! பிரித்து வைப்பதோ! எமது போராட்ட மரபில் கிடையாது.ஒரு குடும்பதில் அவர்களின் அங்கத்தவர்களான தககப்பன் அல்லது சகோதரர்கள் மற்றும் வேறு இயக்கங்களில் இருந்து கொண்டு;  அவர்கள் துரோகச்செயல்ப்பாடுகளில் ஈடுபட்டால்; அவர்களிற்கு மட்டுமேமரண தண்டனை வழங்குவது எமது கடமை ஆகும். ஆனால் அக்குடும்பங்களில் எவ்விதமான பாரபட்சமும் காட்டியது இல்லை. அனைவரையும் சகோதரத்துவ உறவுமுறை ஊடாக; நேசக்கரம் நீட்டி; அனைவரையும் இணைத்து விடுதலைப் போராட்டத்தில் பயணித்தோம். என்பதை தெளிவு படுத்துகின்றேன்.

 இது 1983 கடசிப்பகுதியில் நடந்தது; இதன் பெயர் “லூப்பி” முதலாவது பயிற்சி முகாம் என வைக்கப்பட்டது. இவர்களிற்கான பயிற்சியை இந்திய இராணுவம் வழங்கியது. பயிற்சியை எடுத்துக் கொண்டு பயிற்சி முகாம் பொறுப்பாளராகவும் பொன்னம்மானே இருந்தார்.


 இரண்டாவது பயிற்சி முகாம் “லூப்பி இரண்டாவது” என பெயர் வைக்கப்பட்டது.

இது ரஞ்சன் லாலா தலைமையில் நடைபெற்றது. இதற்கும் இந்திய இராணுவமே பயிற்சி வழங்கியது. தமிழீழத்தில் இருந்துநூறு இளைஞர்கள் அதிலும் பயிற்சி எடுத்தார்கள்.தமிழீழத்தில் இருந்து இளைஞர்களை குண்டப்பாவே படகுகள் மூலம் ஏத்தி இறக்கினார் . அதே நேரம் தலைவரின் பாதுகாப்புத் தொடர்பான கடமைகளையும், அவரே கவனித்தார். இப்பயிற்சி சிறந்த முறையில் நடைபெற்றது. இதில் பயிற்சி எடுத்த போராளிகளில் ஒரு தொகுதியினர் இந்தியாவிலே நின்றதன் காரணம் அடுத்த பயிற்சி முகாம்களை நடத்துவதற்காக;  ஏனையவர்கள் தமிழீழம் அனுப்பப்பட்டார்கள்.

 போராளிகள் திரும்பிய போதிலும் தேசியத் தலைவர் அவர்கள் அதில் திருப்தியடையவில்லை. தமிழகத்தில் மேலும் பயிற்சி முகாம்களை ஆரம்பிக்க வேண்டும் என சிந்தித்தார். இது பற்றி பேவி அண்ணாவோடு கலந்து ஆலோசித்தார். இருவரின் திட்டத்திற்கு அமைவாக அக்காலப் பகுதியில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைபற்றிய புகைப்படக் கண்காட்சிகள் பேவி அண்ணையின் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டுயிருந்தன; 

அப்பொழுது கோவையிலும் திரு. ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அவ்வேளை திரு. ராமகிருஷ்ணன் அவர்களிடம் பேவி அண்ணா பயிற்சி முகாம் நடத்த இடம் தேவைப்படுவதாக தெரிவித்தார். அதைக் கேட்டு  திரு. ராமகிருஷ்ணன் மேட்டூர் கொளத்தூரில் மணி அண்ணாவின் தோட்டம் அதற்கு ஏற்றதாக இருக்கும் என தெரிவித்ததோடு பேவி அண்ணாவையும், மணி அண்ணாவையும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
மணி அண்ணாவும்… “உங்களிற்கு அவ் இடம்பிடித்துக் கொண்டால் தாராளமாக அங்கு நடத்துங்கள்” என தெரிவித்துள்ளார். முதன் முதலில் கொளத்தூருக்குச் சென்று இடத்தைப் பார்வையிட்டு வந்தார் ராகவன். அடுத்து பேபி அண்ணா மற்றும் தேசியத் தலைவர் இருவரும் சென்று மணி அண்ணையைச் சந்தித்து கலந்துரையாடி அங்கு பயிற்சி முகாம்கள் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டதுஅங்கே நடந்த மூன்றாவது பயிற்சி பற்றி சுக்குளா அண்ணா.

3 வது பயிற்சி முகாம் பற்றி போராளி “சுக்குளா” விளக்குகின்றார்;

 14/01/1984 அன்று முதல் முதலாக சில குறிப்பிட்ட இளைஞர்களுடன் நான் அங்கே ஆரம்ப இராணுவப் பயிற்சிக்காகச் சென்றேன்.

நாங்கள் அங்கே சென்றதும்; தைப்பொங்கலிற்காக அவர்களால் பொங்கப்பட்ட நெய்ப் பொங்கல் எங்களிற்கு பரிமாறப் பட்டது. அது மிகவும் சுவையாகயிருந்தது. அது அந்த பண்ணையை எமக்கு தந்து உதவிய குளத்தூர் மணியண்ணைதான்  அப்பொங்கலை எமக்கு பரிமாறினார்.
இப்பயிற்சி  மெதுவாகவே தொடங்கியது. ஏனெனில் தமிழீழம் இருந்து சிறிது சிறிதாக இளைஞர்கள் வந்து கொண்டுயிருந்தரர்கள்…. அதனால் அனைவரும் வரும் வரை நாங்கள் அங்கே பயிற்சி முகாம் தொடர்பான வேலைகளையும், உடல் பபிற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டியிருந்தோம்.

நூற்று முப்பது இளைஞர்களும் வந்தவுடன் 25/01/1984 அன்று பயிற்சி ஆரம்பமானது.
இந்தியன் 3வது பயிற்சி முகாம்,நூற்று முப்பது போராளிகளோடு ஆரம்பமானது.   இரண்டு பெரிய கொட்டில்களில் 65 பேராகப் பிரித்து இரண்டிலும் விட்டார்கள். கர்நாடக மாநில எல்லைப் பிரதேசமான மலைப் பிரதேசத்தை அண்டிய  “கும்பாரப்ப்பிட்டி” குளத்தூர் பகுதியில் இருந்த மணியண்ணையின் தோட்டதில் இப்பயிற்சி முகாம் அமைந்து இருந்தது, இவ் முகாம் பொறும்பாளராக லெப் கேணல். பொன்னம்மான் இருந்தார்.



உடல் பயிற்சி ஆசிரியராக புலேந்தி அம்மானும் அவருக்கு உதவியாக செந்திலும் விடப்பட்டிருந்தார்கள். அடுத்து எங்களின் பயிற்சியை கண்காணிப்பதற்காக எங்களிற்கு முதல் பயிற்சி எடுத்த போராளிகள் விடப்பட்டுயிருந்தனர். அதில் போராளி லூக்காஸ் அம்மான், போராளி மேனன், போராளி சுபாஸ், போராளி பிரபா, போராளி நிதி, போராளி ரமணன், போராளி சைமன், போராளி ரஞ்சன், இவர்கள் விடப்பட்டனர். இப்பயிற்சி சிறப்பான முறையில் நடந்து கொண்டுயிருந்த வேளை பொன்னம்மானின் வேண்டுகோளிற்கு இணங்க காலை நேர உணவை நிறுத்தி அதில் மிஞ்சும் பணத்தில்   பயிற்கு முகாம் தேவைக்கு ஒரு வாகனம் வேண்டுவது என முடிவு எடுக்கப்பட்டது.

அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள் என மூத்த போராளி சுக்குளா குறிப்பிட்டார். இதில் பயிற்சி எடுத்தவர்கள்: 01.பிரிகேடியர் சொர்ணம், 02 பிரிகேடியர் ஜெயம்,  03. ஜெகன் றைவர்,  04. சஞ்சை,  05. நியூடன், 06. சுக்குளா, என 130 போராளிகள் பயிற்சி முடித்தார்கள். இதில் இந்திய இராணுவத்துடன் நடைபெற்ற சண்டையில் கணிசமான போராளிகள் வீரச்சாவு அடைந்துள்ளனர். போராட்டக் கல்வி தொடர்பான வகுப்புக்களை லெப். கேணல் ராதா மற்றும் பொன்னம்மான் இருவரும் எடுத்தார்கள். அணி நடைகளிற்கான பயிற்சியை ராதா அண்ணையும், பொன்னம்மானும் தந்தார்கள்.1984 / 5ம் மாதம் அனைத்துப் பயிற்சிகளும் நிறைவிற்கு வந்ததாக மூத்த போராளி சுக்குளா குறிபிட்டார்.

நிர்மலா பிடிபட்டது தொடர்வாக முன்னர் பார்த்தோம் இனி அவரை மீட்டது தொடர்வாகப்பார்ப்போம்

10/04/1984மட்டு ஜெயிலை உடைத்து நிர்மலாவை மீட்டனர் புலிகள்.

நிர்மலாஎந்தக் காலத்தில்? ஏன் பிடிபட்டார்? என்பது முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொழுது அவரை ஜெயிலில் இருந்து எடுத்தது தொடர்பாகப் பார்ப்போம்.அப்பொழுது நிர்மலா ஜெயிலில் இருந்தார் .1984 /5 மாதம் நிர்மலாவை ஜெயலில் இருந்து மீட்குமாறு தலைவர் கிட்டு அண்ணைக்குக் கட்டளை வழக்கினார். இதை ஏற்றுக் கொண்ட தளபதி கிட்டு அண்ணை மட்டக்களப்பில் இருந்து போராளி பிறான்சிஸ் அவர்களையும்; யாழில்இருந்து போராளி காக்கா அவர்களையும்; எடுத்து  ஒரு மாதம் தன்னோடு வைத்து இருந்து அதற்கான பயிற்சியை கிட்டு அண்ணை வழங்கினார்.அடுத்து இருவருக்கும் இரண்டு றிவ்வோல்வரையும் கொடுத்து அவ் நடவடிக்கைக்காக மட்டக்களப்பிற்கு அனுப்பி அனுப்பிவைத்தார் கிட்டு அண்ணை. இவர்கள் இரண்டு றிவ்வோல்வருடன் அங்கே சென்றார்கள்.அவர்களுடன் சிவம், டேவிற், மற்றும் புதிய உறுப்பினர்கள், அனைவரும் இணைந்து மட்டக்களப்பு ஜெயிலை10/04/1984 வெற்றிகரமாக உடைத்து நிர்மலாவை பொலநறுவை ஊடாக பல இடங்கள் மாறி, மாறி மன்னாருக்குக் கொண்டு வந்து மன்னாரில் இருந்து படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வந்தார் காக்கா அண்ணை.


வெற்றிகரமாக் கொண்டுவந்து தளபதி கிட்டு அண்ணையிடம் ஒப்படைத்தார் அவர்.சிறிது நாட்கள் அங்கே நின்ற நிர்மலா படகு மூலம் கிட்டு அண்ணையால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே சென்ற அவர் சிறிது காலம் விடுதலை புலிகளோடு இருந்தார் பின் அவர்களிடம் இருந்து வெளியேறி இங்கிலாந்து சென்று அங்கே வாழ்கின்றார், இப் புத்தகம் எழுதும் காலத்தில் அவர் உயிரோடு இருந்துள்ளார்,

இவர் சென்ற படகில்தான் பயிற்சி முடித்து அங்கே நின்ற லெப். பரமதேவா யாழ்ப் பாணம் வந்து சேர்ந்தார்.பரமதேவா யாழ்பாணம் வந்து சேர்ந்த வேளையில் பயிற்சி முடித்து இந்தியாவில் கடமையாற்றிக் கொண்டு இருந்த மூத்த போராளி காந்தன் இந்தியாவில் இருந்து வந்து யாழ்பாணத்தில் நின்றார். ஆனால் அவருக்கு அடையாள அட்டை இருந்தமையால் அவரை பேரூந்து ஊடாகக் கிட்டு அண்ணை மட்டக்களப்பிற்கு.அனுபிவைத்தார்.  பரமதேவாவை முல்லைதீவு அணியோடு சேர்த்து கால்நடையாக மட்டக்களப்பிற்கு அனுப்பிவைத்தார் கிட்டு அண்ணை.
 2/03/1984 பயிற்சியை  முடித்து வந்த பரமதேவாவை கிட்டு அவர்கள் தான் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தார்.

அடுத்து பரமதேவா பற்றிப் பார்ப்போம்

தொடரும் அன்புடன் ஈழமதி

Share:

1 thought on “a 773 பாகம் 02 தமிழிழீழக்கதை Tamil Eelam of story”

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *