சுமார் 12,500 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகிலிருந்து அழிவடைந்த Dire Wolf இன ஓநாய்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட்ட வரலாற்று சாதனை அமெரிக்காவில் (USA) பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் இயங்கும் கொலொசல் பயோசயின்சஸ் (Colossal Biosciences) என்னும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற விஞ்ஞானிகளே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

13000 ஆண்டுகள் பழைமையான Dire Wolf இன ஓநாய்களின் பற்கள் மற்றும் 72,000 ஆண்டுகள் பழைமையான அவற்றின் மண்டையோடுகளின் மரபணுக்களை பெற்று DNA மற்றும் குளோனிங் முறைமைகளின் ஊடாக Dire Wolf இன 3 ஓநாய் குட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மைல்கல் சாதனை

இதுவொரு மைல்கல் சாதனை என Colossal Biosciences நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Ben Lamm தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் 2 குட்டிகளும் இந்த வருடம் ஒரு குட்டியும் இவ்வாறு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புத்துயிர் பெற்ற 3 ஓநாய் குட்டிகளுக்கும் Romulus, Remus மற்றும் Khaleesi என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *