யாழ்ப்பாணத்தில் (Jaffna) 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணியொன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்றைய தினம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

கையளிக்கப்பட்ட காணி 

சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி மற்றும் அதனுள் இருந்த கட்டடம் என்பவற்றை வலி கிழக்கு பிரதேச செயலாளரிடம் இராணுவத்தினர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

யாழில் 30 வருடத்திற்கு மேலாக இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு | Land Held By The Military In Jaffna Released

இந்த நிலையில், குறித்த காணி பிரதேச செயலாளரினால் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலயம் இதுவரை காலமும் மாற்றிடம் ஒன்றில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments