யாழில் குடும்ப பெண்ணொருவர் நேற்றையதினம்(24) வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 உடல் சுகயீனம் 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் குடும்பப் பெண் ஒருவர் திடீரென உயிரிழப்பு | A Family Woman Dies Suddenly In Jaffna

குறித்த பெண்ணும் கணவனும் அவர்களது வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில்  உடல் சுகயீனம் ஏற்பட்டதால் மருந்து வாங்குவதற்காக கணவனை கடைக்கு அனுப்பியுள்ளார்.

கணவன் மருந்து வாங்கி கொண்டு வீடு வந்தவேளை மனைவி தண்ணீர் தொட்டியடியில் சடலமாக காணப்பட்டதை அவதானித்துள்ளார்.

திடீரென உயிரிழப்பு

அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக உடற்கூற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *