சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணின் அரைகுறை சடலம் கண்டெடு்ப்புநுரைச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தளுவ தம்பபன்னி கடற்படைத் தளத்திற்கு அருகிலுள்ள கரையோரத்தில் அரிசி மூடைக்கு பயன்படுத்தப்படும் சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இன்று (3) கண்டெடுக்கப்பட்டதாக நுரைச்சோலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
சாக்கு மூடையால் சுற்றப்பட்ட இடுப்புக்குக் கீழே உள்ள உடல் மட்டுமே காணப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
அடையாளம் தெரியாத உடல்
அடையாளம் தெரியாத அந்த உடல் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு, துணியால் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.