யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

வேலணை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி வந்த பேருந்து, மோட்டார் சைக்கிளில் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட போது, இடம் தரவில்லை என, மோட்டார் சைக்கிளில் வந்த மூவரும் பேருந்து சாரதியுடன் முரண்பட்ட நிலையில், பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு, தப்பி சென்றுள்ளனர்.

யாழிலிருந்து தென்னிலங்கை சென்ற சுற்றுலா பேருந்தின் மீது தாக்குதல் | Attack Tourist Bus Traveling Fro Jaffna To Colombo

குறித்த தாக்குதல் சம்பவத்தில் பேருந்தில் இருந்த இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments