அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.

இன அழிப்பு போரின் பின்னரான 16வது தேசிய போர்வீரர் நினைவு விழாவில் உரையாற்றிய அவர், போர் இயற்கையானது அல்ல, ஆனால் அது அதிகாரத்தைப் பெறுவதற்கும், சிலரின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

இன அழிப்பு போரின் பின்னரான 16வது தேசிய போர்வீரர் நினைவு விழா | 16Th Veterans Memorial Day After The Genocide

போர் வெற்றிக்குப் பிறகும் இலங்கை முழுமையான சுதந்திரத்தைப் பெறவில்லை என்று கூறிய ஜனாதிபதி, இலங்கை பொருளாதார சுதந்திரத்தை இழந்த ஒரு நாடு என்றும் அனுர தெரிவித்துள்ளார்.

இதனிடையே போர் வீரர்கள் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு,இன்று (19) முதல் அமலுக்கு வரும் வகையில்,

10,093 அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் அனுரவினால் வழங்கப்பட்டுள்ளன. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments