இராணுவம், துணைப்படைகள், ஆயுதக் குழுக்கள் கொலைகள் படுகொலைகளாக அரங்கேறி வந்தன. அது போல தான் தம்பிலுவில் படுகொலைகள் இன்று நாற்பது ஆண்டுகள் கடந்தும் நீதிக்காக காத்துக் கிடக்கிறது.

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பிலுவில் என்ற இடத்தில் 1985 மே 16 முதல் மே 18 வரை இந்த படுகொலைகள் இடம்பெற்றது.

குறிப்பாக நற்பிட்டிமுனை, துறைநீலாவணை, சேனைக்குடியிருப்பு போன்ற கிராமங்களில் சிறிலங்காவின் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சுமார் 60 தொடக்கம் 63 வரையான தமிழ் இளைஞர்கள் இங்கு கொண்டு வரப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈழத்தமிழர்களின் வரலாற்று வலிகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ibc தமிழ் வானொலி கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments