யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நயினா நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் பாதணிகளை அணிந்து கொண்டு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மக்களும் பௌத்த பிக்குவும் சென்றுள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களின் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

அதி உயர் பாரம்பரியங்களுடன் மிக ஒழுக்கமாக பேணப்பட்டு வரும் ஆலய சூழல் மற்றும் ஆலயம் சார் செயற்பாடுகளுக்கு மத்தியில் பாதணி அணிந்து ஆலயத்திற்குள் பிக்கு உள்ளிட்ட சிலர் வருகை தந்தமை பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் தமிழர் கலாச்சாரத்தில் மிக பெரியதாக போற்றப்படுவது ஒழுக்கமும் பாரம்பரியம் பேணுதலும் மரியாதை செய்தலும் ஆகும்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதணியோடு பிக்கு! | Monk Wit Shoes Nagapoosani Amman Temple Nainadhivu

ஏனைய பல விடையங்களில் பல விட்டுக்கொடுத்தல்களை செய்யதாலும் கூட கலாசாத்திற்கு இது போன்ற கலாசாத்திற்கு தீமை விளைவிக்கும் பணிகளை செய்வதில் யாரும் உடன் படுவதில்லை.

அதிலும் தெய்வ வழிபாட்டிலுள்ளதை உள்ளபடி காத்தலும் பேணுதலும் தலைமுறை தலைமுறையாய் சீர் குலையாமல் வழிவந்துள்ளன.

இவ்வாறான சூழலில் தமிழர்களால் அதிகம் போற்றப்படும் ஆலயத்தில் பாதணி அணிந்து வருவது என்பது பலருக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பிரிவினை வாதத்தையும் ஏற்படுத்துவதாக அமைகின்றது.

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments