கடந்த இரண்டு நாட்களில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டும் 200 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்(Isaac Herzog) தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஏவுகணைகள் பட் யாம் கட்டிடத்தில் விழுந்து வெடித்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர். வடக்கு நகரமான தம்ராவில் விழுந்து வெடித்த ஏவுகணையால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நூறு கிலோ வெடிமருந்தை தாங்கி வந்த ஏவுகணை
பட்யாம் கட்டடத்தில் சுமார் நூறு கிலோ அளவிலான வெடிமருந்தை தாங்கி வந்த ஏவுகணை கட்டடத்தின் மீது நேரடியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஆறுபேர் உயிரிழந்ததுடன் மேலும் 200 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக சென்ற பிரதமர்
இதேவேளை தாக்குதல் நடத்தப்பட்ட பட்யாம் பகுதிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.