வவுனியாவில்  ஆரம்பப்பிரிவு பாடசாலையில் ஆசிரியை   கொலைச் சம்பவத்தில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி மனைவியின் தகாத உறவே கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

 அந்தரங்க காணொளி 

சம்பவத்தில் புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், ஆசிரியையுடன் காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ஆசிரியைக்கு வயது குறைந்த இளைஞன் ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கணவன் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வவுனியாவில் கொலை செய்யப்பட்ட யாழ் ஆசிரியை; வெளியான மேலதிக தகவல் | Jaffna Teacher Murdered In Vavuniya

இந்த விவகாரம் இருவருக்குள்ளும் தீர்க்கப்பட்டு, அண்மைய நாட்களில் சுமுகமாக இருந்துள்ளனர். இந்த நிலையில், ஆசிரியையுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்ட இளைஞன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பியுள்ளனர்.

கர்ப்பமாக இருப்பதற்கு தான் தான் காரணம்

அத்துடன் ஆசிரியை கர்ப்பமாக இருப்பதற்கு தான் தான் காரணம் எனவும் கூறி இருவரின் அந்தரங்க காணொளியையும் அனுப்பியுள்லதாக கூறப்படுகின்றது. இதை பார்த்து கொந்தளித்த கணவன், ஆசிரியையின் சகோதரனிடமும் இதை கூறியுள்ளார்.

பின்னர்,  இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி  மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது  நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி, பிளாஸ்டிக் பையில் வைத்து, மோட்டார் சைக்கிள் டிக்கிக்குள் வைத்து, புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் வவுனியாவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments