முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் கஞ்சா மற்றும் ஐஸ்போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் யுவதி ஒருவருமாக இருவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலையை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரும் , யுவதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா மற்றும் போதைப்பொருளைக் கடத்திச்செல்வதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கபட்டது.

தமிழர் பகுதியில் ஐஸ்போதைப்பொருளுடன் இளைஞர் மற்றும் யுவதி கைது | Young Man And Woman Arrested With Ice Mullaituvu

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற வாகனம் ஒன்றை பொலிஸார் வழிமறித்து சோதனைக்குட்படுத்தினர்.

அதன்போது 550 கிராம் கஞ்சா, 160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றினர். அத்துடன் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துவதற்குரிய பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அதனையடுத்து கஞ்சா மற்றும் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இளைஞர், யுவதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments