வடக்கு காசாவின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

அப்பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு முன்னதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, காசா நகரம் மற்றும் ஜபாலியா முழுவதும் உள்ள சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் அல்-மவாசியின் கடலோரப் பகுதியை நோக்கி தெற்கே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்தம்

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களின் விளைவாக குறைந்தது 86 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்..! இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவு | Israel Orders Evacuations In Northern Gaza

அல்-மவாசியின் “பாதுகாப்பு மண்டலம்” என்று அழைக்கப்படும் இடத்தில் குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்..! இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவு | Israel Orders Evacuations In Northern Gaza

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *