கிளிநொச்சி பூநகரியில் நேற்றையதினம்(01.07.2025) ஏற்பட்ட விபத்தில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் வாகனம் எதிரே வந்த மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேரும் எரி காயங்களுடன் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுமிகள் இரண்டு பெண்கள் ஒரு ஆண் உட்பட ஐந்து பேர் பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி பூநகரியில் ஏற்பட்ட விபத்தில் ஆணொருவர் பலி | Man Died In An Accident In Poonagari

இந்நிலையில், படுகாயமடைந்த ஆண், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது ஆபத்தான கட்டத்தை அடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். இந்நிலையில், விபத்து தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *