பாபா வங்காவின் பேரழிவு கணிப்பு நாள் நெருங்கும் நிலையில், ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாபா வங்கா என்ற பெயர் ரியோ டட்சுக்கி (ryo tatsuki) என்ற ஜப்பானியப் பெண் 2025 இல் பேரழிவு தரும் சுனாமி தாக்கவுள்ளதாக கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானியப் பெண்ணான 70 வயதான இல்லஸ்ட்ரேட்டரான ரியோ டாட்சுகி (ryo tatsuki) , தனது வினோதமான துல்லியமான முன்னறிவிப்புகளால் கவனம் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை புதிய பாபா வங்கா என ஜப்பானிய மக்கள் அழைக்கினர். 

புதிய பாபா வங்கா

மார்ச் 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி, 1995 கோபு பூகம்பம், பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம் போன்ற நிகழ்வுகளை முன்னதாகவே இவர் கணித்திருந்தார்.

பாபா வங்காவின் பேரழிவு கணிப்பு நாள் : அச்சத்தில் மக்கள் | Baba Vanga Predictions Hits Japan Tsunami July5

இவர் எழுதியுள்ள புத்தகத்தில், 2025 ஜூலை 5 ஆம் திகதி ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே பெரியளவிலான சுனாமி ஏற்படும். 

இந்த சுனாமியானது, 2011 ஆம் ஆண்டு ஏற்பட்டதை விட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரியளவிலான சுனாமி

இதன் காரணமாக ஜப்பானுக்கு வர திட்டமிட்டுருந்த சுற்றுலா பயணிகள், 50 சதவீதம் பேர் தங்களது முன்பதிவை ரத்து செய்துள்ளதாக சுற்றுலா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பாபா வங்காவின் பேரழிவு கணிப்பு நாள் : அச்சத்தில் மக்கள் | Baba Vanga Predictions Hits Japan Tsunami July5

இந்நிலையில், ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள டோகாரா தீவுகளில் புதன்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பாபா வங்கா கணிப்பிற்குஇன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *