மித்தெனிய, பல்லே, பகுதியில் ஐந்து வயது சிறுவன் ஒருவர்  தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கியதில் நேற்று (07)  உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவன் மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய மகன் ஆவார்.

மனதை உலுக்கிய 5 வயது சிறுவனின் திடீர் மரணம் ; தாங்கா துயரில் தாய்க்கு நேர்ந்த கதி | 5 Year Old Boy Dies After Falling Into Drum

வீட்டில் ரம்புட்டான் பழத்தை சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தையின் தொண்டையில் ஒரு ரம்புட்டான் விதை சிக்கியதாகவும் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போதிலும் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தங்காலை ஆதார மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குழந்தையின் இழப்பைத் தாங்க முடியாமல் தாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments