கனடாவில்(canada) நகைச்சுவை நடிகரின் உணவகம் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கபில் சர்மா, நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான தி கபில் ஷர்மா ஷோ மற்றும் காமெடி நைட்ஸ் வித் கபில் ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர்.
அண்மையில் திறக்கப்பட்ட உணவகம்
இவர், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே என்னுமிடத்தில் சமீபத்தில் புதிதாக கப்ஸ் கேப் என்ற உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகத்தின் மீது நேற்று(09) இரவு காரிலிருந்த மர்ம நபர் துப்பாக்கியால் 9 முறை சுட்டுவிட்டு தப்பிவிட்டார்.எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்துக்கு இந்தியாவால் தேடப்பட்டு வரும் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜீத் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளார். இது பற்றி கனடா காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.