2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 37 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

அவற்றில் 48 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாத்திரம் சுமார் ஐந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுமான “குடு சலிந்து” மற்றும் “பாணந்துறை நிலங்க” ஆகியோருக்கு இடையிலான தகராறு காரணமாக பாணந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments