யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குருக்கள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் நேர்ந்த பெரும் துயரம் ; அலட்சியத்தால் பறிபோன குருக்களின் உயிர் | Negligence Kills Priest In Jaffna Sorrow Spreads

அலட்சியத்தால் பறிபோன உயிர் 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள ரயில் கடவையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த நபர் நேற்று பிற்பகல் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார்.

ரயில் வரும்போது ரயில் கடவை மூடப்பட்டிருந்தபோதும் அதனை கடப்பதற்கு முயற்சித்தவேளை ரயில் அவரது துவிச்சக்கர வண்டியின் பின் பக்கத்தில் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிமேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments