பிரித்தானியாவில் (United Kingdom) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நாடு கடந்த தமிமீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
மதியம் ஒரு மணி முதல் நான்கு மணி வரை காஸ்கோவின் 24 ஜார்ஜ் சதுக்கம், மூன்றாவது மாடி, ரிபியூவீஜி வளாகத்தில் நடைபெற்றது.
இனப்படுகொலை
கறுப்பு ஜூலையை நினைவு கூறும் முகமாக தமிழ் மக்களின் இனப்படுகொலையை எடுத்து காட்டும் பாடல்களும் மற்றும் உரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தது.

அத்தோடு, கறுப்பு ஜூலை இனப்படுகொலைக்கு எதிராக, லண்டனில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
