வவுனியா குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில்தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர்.

வவுனியா குடியிருப்பு பகுதியை சேர்ந்த எழிலரசி வயது 53 என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது,  குடியிருப்பு மடத்தடிவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் சடலம் இருப்பது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

தமிழர் பகுதியில் வீடொன்றில் இருந்து மர்ம முறையில் பெண்ணின் சடலம் மீட்பு | Woman S Body Mysteriously Recovered From A House

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீட்டின் கீழ்தளத்தில் தனிமையில் இருந்த பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் பொலிசார் அதனை உடைத்து உள்ளே சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments