யாழ் – குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹீரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 90 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் சிக்கிய உண்மை ; இரகசிய தகவல் மூலம் கைதான கணவன் மனைவி | Caught Jaffna Husband Wife Arrested Information

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தின் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments