நீர்வீழ்ச்சிக்குள் விழுந்த சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக குதித்த ஈழத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் வேல்ஸ் நாட்டில் Swanseaயில் நடந்துள்ளது.

வெளிநாடொன்றில் மருமகள்களுக்காக உயிரை விட்ட இலங்கை தமிழ் இளைஞன் ; கதறும் குடும்பம் | Lankan Youth Dies Saving Nieces In Abroad

நீர்வீழ்ச்சிக்குள் குதித்த  இளைஞன்

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வேல்ஸ் நாட்டிலுள்ள Swanseaயில் வசித்து வந்த ஈழத்தைச் சேர்ந்த மோகனநீதன் முருகானந்தராஜா (வயது -27) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞர் தன் உறவினர்களுடன் Swanseaயில் உள்ள Brecon Beacons என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவரது குடும்பத்தினர் பலர் அங்குள்ள நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாடிய சிறிது நேரத்தில் இளைஞரின் சகோதரியின் மகள்கள் இருவர் தண்ணீரில் தத்தளித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரி மீது

அவர்களைக் காப்பாற்ற உடனே இளைஞன் நீர்வீழ்ச்சிக்குள் குதித்துள்ளார். தன் சகோதரியின் மகள்கள் இருவரையும் தண்ணீரில் தத்தளித்த மற்ற உறவினர்களையும் மீட்டு கரை சேர்த்த பின்னர் இளைஞன் தவறுதலாக தண்ணீரில் சிக்கிக்கொண்டார்.

நீர்வீழ்ச்சிக்குள் சிக்கிக் கொண்ட இளைஞனை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டும் இளைஞன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மறுநாள் இளைஞனை மீட்புக்குழுவினர் சடலமாக மீட்டனர்.

சகோதரியின் மகள்களைக் காப்பாற்றி தன்னுயிரை விட்ட இளைஞனின் உயிரிழப்பு குடும்பத்தை மட்டுமன்றி அப்பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments