மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மகிழவெட்டுவானை சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் சம்பவதினத்தன்று இரவு தனது 3 வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்துள்ள நிலையில் குடிமனைக்குள் உட்புகுந்த யானை அவர்கள் மீது தாக்கியதில் தாயார் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.