.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் (Ghana) உலங்கு வானூர்தியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனஇந்த விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து இன்று (06) காலை 9.12 மணியளவில் (உள்ளூர் நேரப்படி), அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு இராணுவ உலங்கு வானூர்தியொன்று புறப்பட்டுள்ளது.

உலங்கு வானூர்தி

இந்த உலங்கு வானூர்தியில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இரண்டு பேர் உள்பட எட்டு பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கானா நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து: அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலி | Latest News Helicopter Crash Today

இதையடுத்து, அங்குள்ள வனப்பகுதியில் அந்த உலங்கு வானூர்தி கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், கானாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா முஹம்மது உள்பட அந்த ஹெலிகாப்டரில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசின் செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments