வடகொரியாவில் (north korea) இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறினார்கள் என தெரிவித்து 30அரச அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுமாறு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டதற்கு அமைவாக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கிம்மின் ஆட்சியின் கீழ் உள்ள ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் வடகொரியாவில் பாரிய மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4000 பேர் உயிரிழந்தனர். இந்த இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறினார்கள் எனத் தெரிவித்தே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

20 முதல் 30 பேருக்கு எதிராக ஊழல் மற்றும் வேலையில் அலட்சியம் குறித்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரியொருவர் அவர்களிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என அரசதொலைக்காட்சியான சோசன் தெரிவித்துள்ளது

ஒரே நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்

மழைவெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் 20 முதல் 30 ஊழியர்கள் ஒரே நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். எனினும் இந்த தகவலை சுயாதீன வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.

கொல்லப்பட்ட அதிகாரிகள் யார் என்பது குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை எனினும்,வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து பதவி நீக்கப்பட்டவர்களில் முக்கிய அதிகாரிகள் சிலர் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட வடகொரிய ஜனாதிபதி 

 மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த மாதம் பார்வையிட்ட வடகொரிய ஜனாதிபதி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளகட்டியெழுப்ப பலமாதங்களாகும் என தெரிவித்திருந்தார். 

வடகொரிய ஜனாதிபதி அதிரடி உத்தரவு : 30 அரச அதிகாரிகள் சுட்டுக்கொலை | Kim Jong Un Executes 30 Officials
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments