இலங்கையில் நிலவும் கடும் வறட்சியால் தமிழர் பகுதி ஒன்றில் ஏற்பட்டுள்ள நிலை!இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சியில் பலர் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாரதிபுரம் பகுதி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கண்டாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடும் வறட்சி காரணமாக வாழை, கடுகு உள்ளிட்ட பல பயிர்கள் அழிவடைந்து வரும் நிலை காணப்படுவதாக செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடும் வறட்சியால் தமிழர் பகுதி ஒன்றில் ஏற்பட்டுள்ள நிலை! | Kilinochchi Affected Severe Drought In Sri Lanka

இலங்கையில் தற்போது தேங்காய்க்கு பெரும் கிராக்கி நிலவிவரும் நிலையில், தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டு 9 வருடம் கடந்த நிலையில் பயன்தரக் கூடிய நிலையில் இருந்த பலரது தென்னைகள் அழிவடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் நிலவும் கடும் வறட்சியால் தமிழர் பகுதி ஒன்றில் ஏற்பட்டுள்ள நிலை! | Kilinochchi Affected Severe Drought In Sri Lanka

இதேபோன்று வாழைச் செய்கையிலும் வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு கமுகு போன்றவையும் அழிவடையும் நிலையில் காணப்படுவதாவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளன

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *