திடீரென காணாமல்போன பெண்… பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

இரத்தினபுரி எத்ஓயா பகுதியைச் சேர்ந்த 41 வயதான அங்கப்புலிகே தர்ஷினி இந்திகா ஜயலத் என்ற பெண் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காணாமல்போன பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

காணாமல்போன பெண்ணின் மகளால் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

புகைப்படத்தில் உள்ள பெண் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் 071-859 1385 அல்லது 045-222 2222 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments