வன்னியில் 1983ம் ஆண்டுவரை சுமார் 40 வருடங்களாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர்கள் தாம் அங்கு ஓரங்கடப்பட்டுவருவதாக ஆதங்கம் வெளியிட்டு வருகின்றார்கள்.
1983ம் ஆண்டு இடம்பெற்ற வன்முறையில் இருந்து தப்பித்து வன்னியில் குடியேறிய அவர்கள், இன்றுவரை அங்கு ஓரங்கட்டப்பட்டுவருவதாகவும், பின்தங்கிய வாழ்க்கைமுறைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் கவலை வெளியிடுகின்றார்கள்.
இனவிடுதலைப் போராட்டத்தின் போது தம்மை அர்ப்பணித்து அகுதியாக்கிக்கொண்ட வன்னிவாழ் மக்களை இதுபோன்ற மனநிலையுடன் வைத்திருப்பதற்கு, ஈழத்தமிழ் இனம் உண்மையிலேயே வெட்கப்பட்டாகவேண்டும்