யாழ் அரச அலுவலகம் ஒன்றில் இப்படியா? பெண் வெளியிட்ட பகீர் காணொளி!யாழ் அரச அலுவலகம் ஒன்றில் வயோதிப தாய் ஒருவருக்கு நேர்ந்த அவலநிலை தொடர்பில், பெண் ஒருவர் வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலகம் ஒன்றுக்கு சென்ற வயோதிப தாய், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற சென்றபோது அங்கு பணியில் இருந்த அரச ஊழியர் அந்த முதிய பெண்மணியை உதாசீன படுத்தி அவமானப்படுத்தியுள்ளார்.

யாழ் அரச அலுவலகம் ஒன்றில் இப்படியா? பெண் வெளியிட்ட பகீர் காணொளி! | Jaffna Gov Offices Viral Video Disgrace Women

முதிய பெண்மணியை அவமானப்படுத்திய அரச ஊழியர்

சேவை பெறச் சென்ற மூதாட்டிக்கு எழுத படிக்க தெரியாது என்பதால், அங்கு படிவம் கொடுத்த அரச ஊழியரிடம் அதனை கூறி தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

இதன்போது அந்த ஊழியர் உங்களுக்கு சேவை செய்வது என்வேலை இல்லை என கூறி அந்த வயோதிப பெண்ணை அவமானப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது அங்கு பலர் கூடியிருந்த நிலையில் சம்பவம் இடத்தில் இருந்த யுவதி ஒருவர் தனது ஆதங்கத்தை காணொளி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பல அரச அலுவலகங்களில் சில அரச ஊழியர்கள் இவ்வாறு சேவை பெற செல்லும் மக்களை அவமானத்தப்படுத்தி அனுப்பிவிடும் சம்பங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றதாக காணொளி வெளியிட்ட பெண் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதுபோன்று நடந்துகொள்ள வேண்டாம் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார் .  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments