ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், ஏனைய கட்சிகள் தமது ஆதரவு நிலைப்பாட்டை அறித்துள்ளதையடுத்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடளுமன்ற உறுப்பினர், “கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் தான் எமது நிலைப்பாட்டை அறிவித்தோம்.

தேர்தல் அறிக்கை

இந்த தடவை அது ஒரு வித்தியாசமாக வரவேண்டும் என்ற எந்த தேவையும் கிடையாது. எல்லா வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கிறோம்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு..மௌனம் காக்கும் தமிழரசுக்கட்சி | Itak S Position On The Presidential Election

அவர்களின் தேர்தல் அறிக்கையில் முழு நாட்டுக்கும் என்ன சொல்லியிருக்கிறார் என பார்த்து சரியான நேரத்தில் அறிவிப்போம் ” என மேலும் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments