கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இரண்டு நாட்களுக்கு மேலாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பரந்தன் – முல்லைத்தீவு ஏ – 35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் நேற்று பகல் வரை குறித்த மோட்டார் சைக்கிள் அனாதரவாக விடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணை 

இந்நிலையில், குறித்த மோட்டார் சைக்கிள் சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை பிரதேச மக்கள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த மோட்டார் சைக்கிள் மீட்பு | Motor Bike Been Captured By Police In Kilinochchi

இதனை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.

இந்த மோட்டார் சயிக்கிள் களவாடப்பட்டு கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments