யாழ்ப்பாணம் (jaffna) – வல்லை பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குறித்த விபத்தானது இன்று (12.10.2024) யாழ். வல்வை பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அடையாளம் காணப்படாத நிலை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Point Pedro) வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

யாழ். வல்லை பகுதியில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே ஆண் பலி | Men Death Road Accident In Jaffna
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments